Wednesday, April 22, 2009
எம் ஜி ஆர் மற்றும் ரஜினி..இரு துருவங்கள்..
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக திகழ்ந்த இருவர் எம் ஜி ஆர் மற்றும் ரஜினிகாந்த்.
இவர்கள் இருவரின் அளவிற்கு வேறு எந்த தமிழ் நடிகர்களுக்கும் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இருக்கவில்லை எனலாம். இன்று "மக்கள் திலகம் எம் ஜி ஆர்" அவர்கள் உயிருடன் இல்லாவிடிலும் பல மக்களின் மனதில் உயிருடன் குடிகொண்டு இருக்கிறார். மற்றும் அவருடைய பாடல்கள் இன்றும் மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்.
ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்த எம் ஜி ஆர் பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் இடம்பெறுவார் என யாரும் நினைத்து இருக்கமாட்டார்கள். 1936 இல் சதி லீலாவதி என்ற படத்தில் நடித்தார். ஆனால் பிறகு வந்த "ராஜகுமாரி" திரைப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியான 25 வருடங்களுக்கு தமிழ் திரைப்பட உலகில் ஒரு "நட்சத்திரமாக" திகழ்ந்தார். இவரை நம்பி படம் எடுத்த பலருக்கு இலாபமே கிடைத்தது. இவர் நடித்த படங்களில் "நாடோடி மன்னன், மலைக்கள்ளன், எங்க வீட்டு பிள்ளை, ஒளிவிளக்கு" ஆகிய படங்கள் பலரால் மறக்க முடியாதவை. மற்றும் இவரை இன்னும் தூக்கி நிறுத்திய விடயங்கள் என்றால் அதில் முக்கியமான முதலாவது விடயம் இவரது திரைப்பட பாடல்கள். இவரது புரட்சி பாடல்கள் எப்போதும் அழியாதவை. மற்றும் இவரது சண்டைக்காட்சிகள் புகழ் பெற்றவை, பல சண்டைக்காட்சிகளை இவரே "டூப்" இல்லாமல் செய்ய முயற்சிப்பார்.
முதலமைச்சர் ஆக முன்னமே இவர் பல மக்களுக்கு உதவி செய்தார். அதுவே இவரை அரசியல் ஆசனத்தில் அமரவைத்தது. அதிகமாக மக்களுடன் கோபம் கொள்ள விரும்ப மாட்டார்.
இவருடைய பாடல்களில் "நான் ஆணையிட்டால்" பாடல் இன்னும் என்னை கவர்ந்த ஒன்று.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் குணசித்ர மற்றும் வில்லன் வேடங்களில் நடிக்கதொடங்கி பின்னர் சூப்பர் ஸ்டார் என்ற நிலைக்கு முன்னேறிய நடிகர் ரஜினிகாந்த்.
"பைரவி, பில்லா, முரட்டுக்காளை, பிரியா" போன்ற படங்கள் இவரை உச்ச நட்சத்திரமாக மாற்றியது.
எம் ஜி ஆர் க்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் இவர் என்றால் அது மிகையாகாது.
எம் ஜி ஆரைப்போலவே இவருடைய படப்பாடல்களும் பிரபலமானவை. மற்றும் தமிழ் சினிமாவின் முதல் "ஸ்டைல்" நாயகனும் இவர்தான், "சிகரட்"டை ஸ்டைலாக புகைப்பது அதில் முக்கியமான ஒன்று. மற்றும் நகைச்சுவை காட்சிகளில் திறமையானவராக இருந்தார். "தில்லு முள்ளு" படம் சூப்பர் ஹிட் ஆனது பலரின் நினைவில் இருக்கலாம். ஆனால் இவர் எம் ஜி ஆரை போல் சண்டை காட்சிகளில் அதிகம் சிரம் எடுக்க விரும்பமாட்டார். ஆனால் "அண்ணாமலை, ரங்கா, வீரா, பாட்ஷா" போன்ற படங்களில் சிறப்பாக சண்டை செய்தார்.
மற்றும் இவருடைய ரசிகர்கள் வீட்டு சாமி அறையில் இவரும் ஒரு "கடவுள்" ஆக இருக்கிறார். எம் ஜி ஆரைப்போலவே இவரும் பல மக்களுக்கு உதவி செய்தார் எனலாம்.
அரசியல் விடயங்களை தவிர இவர்கள் இருவரும் கிட்டதட்ட ஒரே மாதிரியான குணங்களை கொண்டவர்கள்.
என்னை பொறுத்தவரை இவர்களுக்கு பிறகு வேறு யாரும் "சூப்பர் ஸ்டார்"களாக வலம் வரமுடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
தியாகராஜ பாகவதருக்குப் பின் முதலிடம் சில ஆண்டுகள் காலியாக இருந்தது. டி.ஆர் முதலானோர் முயற்சி செய்து கொண்டுதான் இருந்தனர்.ஆனால் அது மக்கள் திலகத்திற்கு கிடைத்தது. அவர் முதல்வரான பின் அந்த முதலிடத்திற்கு ரஜினி வந்தார். ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறோம். முதலிடம் பெற்றவரை நாம் சூப்பர்ஸ்டார் என்று சொல்லவில்லை..
ReplyDeleteரஜினி திரையுலகில் இருக்கும்வரை அவர்தான் முதலிடம். அவர் ஓய்வு பெற்றால் அடுத்து ஒருவர் முதலிடம் பெறுவார். ஆனால் அவர் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப் பட மாட்டார். அவருக்கு ஏதாவது ஒரு பெயர் வைத்து கொள்வார்கள்