Thursday, April 16, 2009

வாரணம் ஆயிரம்..மீண்டும் என் பார்வையில்..



என்னதான் "அயன்" திரைப்படம் வெளிவந்தாலும், பலரின் மனதில் குறிப்பாக இளைஞர்கள் மனதில் "வாரணம் ஆயிரம்" படம் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கிறது..
குறிப்பாக படப்பாடல்கள் இன்னும் பலரின் வாயில் முணுமுணுக்கப்படுகிறது. நான் மீண்டும் அந்த திரைப்படத்தைப்பார்த்தேன். உண்மையில் கௌதம் மேனன் ரசித்து ரசித்து கதையை செதுக்கியுள்ளார் என்று கூறலாம்.

காதல் திருமணம் செய்த கிருஷ்ணன் மற்றும் மாலினிக்கு மகனாக சூர்யா. தன் அப்பாவை ரோல் மொடேலாக நினைத்து வளர்பவன். அப்பாவின் செல்லம். ஆரம்பம் முதல் தன் குடும்பம் மற்றும் தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறான். இளமைக்காலத்தை அப்பாவின் சொல் தட்டாமல் அதே நேரம் மிகவும் ஜாலியாக கொண்டாடுகிறான். காலேஜ் இல் படிப்பதற்காக முதன் முதலாக தன் குடும்பத்திலிருந்து பிரிந்து காலேஜ் விடுதியில் தங்கி படிக்கிறான்.

காலேஜ் வாழ்க்கை முடிந்து வீடு வரும் வழியில் ஒரு பெண்ணின் மேல் காதல் கொள்கிறான். (கண்டதும் காதல்) அவளிடம் உடனே தன் காதலை கூறுகிறான். அவள் உடனே சம்மதிக்க மறுக்கிறாள். சில நாட்களின் பின் அவள் வீட்டுக்கே சென்று காதலை கூறுகிறான். அவள் அமெரிக்க சென்று படிக்கப்போவதாக கூறுகிறாள். தன் தந்தையின் அனுமதியுடன் அமெரிக்க செல்வதற்கும் திட்டமிடுகிறான். இடைப்பட்ட காலத்தில் "அப்பாவின் சுகயீனம், ப்ராஜெக்ட் வெற்றி" ஆகியவை அவன் வாழ்க்கையில் வந்து போகின்றன. அதன் பின் மீண்டும் "காதல்" பற்றி சிந்திக்கிறான். அமெரிக்காவிற்கும் பயணமாகிறான்.

அங்கு சென்று காதலியை சந்தித்து அவளிடமிருந்து சம்மதமும் வாங்கிக்கொள்கிறான். என்ன துரதிர்ஷ்டம் காதலிக்க ஆரம்பித்து இரண்டே நாட்களில் காதலி குண்டு வெடிப்பில் உயிரிழக்கிறாள். மனக்கவலையுடன் மீண்டும் வீட்டுக்கே (இந்தியா) வருகிறான், அவனால் காதலியை மறக்கமுடியவில்லை. இங்கு வந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறான். அவன் தந்தையின் அன்பான ஆணையால் காஷ்மீர் செல்கிறான். அங்கு தீவிரவாதிகளிடமிருந்து ஒரு பிள்ளையை காப்பாற்றுகிறான். மற்றும் குடிப்பழக்கமும் இல்லாமல் போகிறது. மீண்டும் அவன் வாழ்கையில் ஒரு வசந்தம் வந்தது போல் உணர்கிறான்.

தந்தையின் அனுமதியுடன் அவன் விருப்பப்பட்ட இந்திய இராணுவத்தில் சேர்கிறான், சேர்ந்து 6 வருடங்களில் உயரதிகாரி ஆகிறான். தன் தங்கையின் நண்பியின் காதலை ஏற்றுக்கொள்கிறான். இருவரின் வாழ்க்கையும் சந்தோசமாக போகிறது. இந்நேரத்தில் அவன் அப்பாவிற்கு மீண்டும் சுகயீனம் வருகிறது. அவன் இராணுவ கடமைக்கு சென்ற வேளையில் அவன் அப்பா உயிரிறக்கிறார். மீண்டும் அவனுக்குள் கவலைகள் வந்து உருவெடுக்கின்றன. "இன்னும் அப்பா எங்களுடன்தான் இருக்கிறார்" என்ற அம்மாவின் கருத்துடன். கதை சுபம்.

வித்தியாசமான கதை... "ஆட்டோகிராப்" "தவமாய் தவமிருந்து" "வெயில்" "கிரீடம்" போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் இதுவும் இணைந்துள்ளது.

இரட்டை வேடங்களில் சூர்யா அசத்தியுள்ளார். அதுவும் முதன் முதலாக பிரியும் வேளையில் தந்தை கல்லூரிக்கு மகனை வழியனுப்பும் போது மகன் சூர்யா கண்களில் இருந்து வரும் கண்ணீர், எங்கள் கண்களிலிருந்தும் கண்ணீரை வரவழைக்கிறது.
படத்தில் உள்ள அனைத்து முகமாற்றங்களும் (makeup) சூர்யாவிற்கு பொருந்தியிருக்கிறது.
காதலை இழந்து தவிர்க்கும் வேளையில் சூர்யாவின் நடிப்பு இன்னும் அருமை.

அம்மா வேடத்தில் வரும் சிம்ரன் அழகாக நடித்து இருக்கிறார்.

இன்னுமொரு பலம் தமிழிற்கு புதுவரவு "சமீரா ரெட்டி"..இந்த படத்தின் பின் பலருடைய மனதில் கனவுக்கன்னியாக இருக்கிறார். "நெஞ்சுக்குள் பெய்திடும்" பாடலுக்கு அவருடைய முகபாவனை அழகு.

திவ்யாவிற்கு ஆரம்பத்தில் பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும் இறுதியில் காதலை வெளிப்படுத்தும் நேரங்களில் அழகாக நடித்துள்ளார்.

என்ன இருந்தாலும் படத்தின் மிகப்பெரிய பலம் (பலமோ பலம்) படத்தின் பாடல்கள். (ஹரிஷ் அண்ணா..எப்படி உங்களால மட்டும்) ஹரிஷ் ஜெயராஜ் - கௌதம் கூட்டணி மீண்டும் ஜொலித்துள்ளது. "முன்தினம் பார்த்தேன்" "நெஞ்சுக்குள் பெய்திடும்" "அஞ்சல"
பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகின்றன. "அடியே கொல்லுதே" பாடலுக்கு சூர்யாவின் நடனம் பிரமாதம். "ஏத்தி ஏத்தி" பாடல் அப்பாவியாய் இருந்து முன்னேறிய இளைஞர்களுக்கு ஒரு "தேசிய கீதம்".

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு பிரமாதம்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள ஆழமான புரிந்துணர்வு மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. நெல்லைத்தமிழில் இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வேர்டு வெரிபிகேஷனை தூக்குங்கள் நண்பா..

    ReplyDelete
  3. அருமையான விமர்சனம் நண்பரே!

    நெல்லைதமிழில் நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அனைவருக்கும் நன்றி.. :-)

    ReplyDelete
  5. மனதிற்க்கு மிகவும் நெருக்கமான படம் நண்பா!!!! நம்ம கட பக்கமும் வாங்க...

    ReplyDelete