"இளையதளபதி", "டாக்டர்" என்ற பெயர்களுடன் ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய்க்கும், "ஆசை நாயகன்" "தல" மற்றும் "அல்டிமேட் ஸ்டார்" என்று அழைக்கப்படும் அஜித்திற்கும் எப்போதும் ஒரு போட்டி இருந்து வருகிறது.
எம் ஜி ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் என்ற தலைமுறைக்கு பிறகு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தலைமுறை என்றால் அது விஜய் - அஜித் என்றுதான் இருக்கும். சிவாஜி நடிப்பில் திறமையை நிருபித்தார்..ஆனால் எம் ஜி ஆர் தன் ஸ்டைல் மற்றும் புரட்சி பாடல்கள் மூலம் அதிகளவு ரசிகர்களை சேகரித்தார். அவருடைய அரசியல் வெற்றிகள் அதை இன்னும் நிருபிக்கும். இதே விடயம் ரஜினிக்கும் பொருந்தும்..(அரசியல் தவிர்த்து உற்று நோக்கினால் எம் ஜி ஆர் மற்றும் ரஜினி இவருடைய மனப்பான்மைகளும் ஒரே மாதிரி இருக்கும்.)
ஆனால் விஜய் மற்றும் அஜித்திற்கு சம அளவில் ரசிகர்கள் உள்ளனர். இலங்கையில் விஜய்க்கு அதிகம் ரசிகர் பட்டாளம் உண்டு (கில்லி படம் இலங்கையில் வெற்றிகரமாக ஓடியது), மற்றும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் என்று பார்த்தால் அஜித்திற்கு செல்வாக்கு அதிகமாக இருக்கும் (பில்லா மற்றும் வரலாறு படங்கள் அங்கு சிறப்பாக ஓடியமை இதற்கு உதாரணம்)
ஆரம்ப கட்டத்தில் விஜயைவிட அஜித்திற்கு கொஞ்சம் ரசிகர்கள் அதிகம் இருந்தனர்.
குறிப்பாக வாலி, முகவரி, தீனா, சிட்டிசன் மற்றும் வில்லன் ஆகிய படங்கள் அதற்கு சான்றாக இருந்தன.. "வில்லன்" படம் வரும்வரை அஜித்தின் செல்வாக்கு சற்று ஓங்கியிருந்தது. மற்றும் உணர்ச்சிவசமான முகத்துடன் சண்டை பிடிக்கும் திறமை அஜித்திடம் அதிகம் காணப்பட்டது. மற்றும் அதிகம் பேசாமை, அவரிடம் காணப்படும் அமைதி என்பன ரசிகர்களின் மனதில் நிலையான இடம் பிடித்தன.
ஆனால் "திருமலை" "கில்லி" "திருப்பாச்சி" ஆகிய படங்கள் விஜயை மாபெரும் சிகரத்தில் வைத்தன..அதிலும் "கில்லி" விஜய்க்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. மற்றும் "திருமலை" படத்தில் அவர் பேசிய வசனங்கள் அஜித்தை குறை காட்டுவதாக பலர் விசனம் செய்தனர். எனினும் அந்த பிரச்சினை உடனே ஓய்ந்தது. ஆனால் ரசிகர்களின் மனதில் இருந்து அது ஓயவில்லை. மற்றும் இந்த படங்களில் வரும் நகைச்சுவை, நடனம், பாடல்கள் ஆகியன விஜய்க்கு புகழை சேர்த்தன.
அந்த நேரம் அஜித் கார் ரேசில் மிகவும் ஆர்வமாக இருந்தார். அதனால் அவரால் சினிமாவில் கவனம் செலுத்தவில்லை, அதனால்தான் அவரது சினிமா பயணம் முன்னேற்றம் காணாமல் இருந்தது என்று இன்றும் பலர் கூறுகின்றனர். மற்றும் அவரது வெளிப்படையான கருத்துகள் ஒரு சிலர் மத்தியில் கோபத்தை உண்டாக்கின.(இப்போது விஜயின் நிலையும் கிட்டதட்ட அதே போல்தான் உள்ளது "ஏய்..சைலென்ஸ்")
"ஆஞ்சநேயா" "ஜனா" ஆகிய படங்கள் அஜித்திற்கு படுதோல்வியை தந்தன. ஆனால் "அட்டகாசம்" அஜித்திற்கு ஓரளவு நல்ல பெயரை அளித்தது. தொடர்ந்து வெளியான "ஜி" படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.
இந்த நிலைமையில் விஜய்க்கு ரசிகர் பட்டாளம் அதிகம் உருவானது.
தொடர்ந்து இவர்கள் நடித்து ஒரே சமயம் வெளியான "ஆதி" மற்றும் "பரமசிவன்" ஆகிய படங்கள் 2006 பொங்கல் தினத்தன்று வெளிவந்தன. அதிலும் அஜித்தின் "பரமசிவன்" அதிகம் கண்டுகொள்ளப்பட்டது. காரணம் அவர் தன் உடலை மிகவும் குறைத்து நடித்த படம் என்பதால் ஆகும். ஆனால் விஜயின் "ஆதி" எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. ஆனால் பரமசிவன் அஜித்திற்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. குறிப்பாக படத்தின் கடைசியில் வரும் "பைக் சேஸ்" காட்சி, அவர் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. தொடர்ந்து அஜித் நடித்த "திருப்பதி" அஜித் ரசிகர்களால் மட்டுமே வரவேற்கப்பட்டது (விடயம் புரிந்ததா?).. ஆனால் அவர் 3 வேடங்களில் நடித்த "வரலாறு" மெகா ஹிட் ஆனது. படத்தின் பாடல்கள் மக்களால் அதிகம் கேட்கப்பட்டன (வேற யாரு நம்ம ஆஸ்கார் நாயகன் இசைதான்). "பெண்" நளின வேடத்தில் வரும் அஜித்தின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இதனால் அந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான "பிலிம் பேர்" விருதை அஜித் தட்டி சென்றார்.
அதனால் 4 வருட போராட்டத்தின் பின் அஜித் மீண்டும் தன்னை சிகரத்தில் வைத்தார். ("தல"க்கு தன்னம்பிக்கை அதிகம் என விஜய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.)
2007 இல் ஒரே சமயம் "போக்கிரி" மற்றும் "ஆழ்வார்" ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனால் "ஆழ்வார்" பெரிதாக ஓடவில்லை. ஆனால் விஜயின் "போக்கிரி" மாபெரும் வெற்றி பெற்றது, படத்தின் பாடல்கள், நகைச்சுவை ஆகியன பெரிதும் விரும்பப்பட்டன.
அதன் பிறகு அஜித்தின் "கிரீடம்" அவருக்கு கதை ரீதியாக நல்ல பெயரை வாங்கித்தந்தது.
விஜயின் "அழகிய தமிழ் மகன்" சுமாராகவே ஓடியது, ஆனால் அஜித்தின் "பில்லா" அவர் வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்தது, படத்தின் பாடல்கள், சண்டைகாட்சிகள், அஜித்தின் ஸ்டைல் ஆகியன படத்திற்கு மேலும் மெருகூட்டின..
அதன் பிறகு விஜயின் "குருவி" சுமார் ரகமாகவே ஓடியது. மற்றும் அஜித்தின் "ஏகன்" பெரிதாக ஓடவில்லை. இலங்கை தமிழர்களை பற்றி அவதூறாக கூறியதாக சில நாடுகளில் இத்திரைப்படம் திரையிடப்படவில்லை. தற்போது விஜய் நடித்து வெளிவந்தது உள்ள "வில்லு" திரைப்படத்திற்கு தற்போது பல விசனங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆக மொத்தத்தில் இந்த இருவருடைய பாதையும் ஒரே மாதிரித்தான் உள்ளன..
தற்போது சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், பரத், ஜெயம் ரவி ஆகியோர் முன்னணி நடிகர்களாக வலம் வந்தாலும், இந்த விஜய் - அஜித் கூட்டணிக்குத்தான் எப்போதும் ஒரு விறுவிறுப்பு காணப்படும்.
இந்த கோமாளிகளையும் தீவிரமாக தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்களே? :-(
ReplyDeleteஇது ஆராய்ச்சி அல்ல நண்பரே..
ReplyDeleteஅவர்களின் வாழ்க்கைப்பாதைகளை சற்று நினைவூட்டினேன்..
உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் பரவாயில்லை..
//தற்போது சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால், பரத், ஜெயம் ரவி ஆகியோர் முன்னணி நடிகர்களாக வலம் வந்தாலும்//
ReplyDeleteசிம்பு வ விட்டுடிங்களே....
சிம்புவிற்கு இன்னும் காலம் உள்ளது..
ReplyDeleteஅவர் இப்போதுதான் முன்னேற ஆரம்பிக்கிறார்..
மற்றும் மேல் கூறிய நடிகர்களுக்கு ரசிகர்கள் அதிகம்..
விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளிவரட்டும்..
நிச்சயம் சிம்புவின் பெயரும் அடிபடும்..
GUD ANALYZATION BROTHER...
ReplyDeletethx dyena akka..
ReplyDelete