Tuesday, April 14, 2009
வரும் 20 20 உலகக்கிண்ண போட்டிகள் எப்படி இருக்கப்போகின்றன (தொடர்ச்சி)
ஒரு கட்டத்தில் இரண்டு பந்துகள் மீதமிருக்க ஒரே ஒரு ஓட்டம் பெறவேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி இருந்தது. எனினும் ஸ்ரீசாந்த் மற்றும் யுவராஜ் சிங்கின் பந்துவீச்சு மற்றும் களதடுப்பினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதன் பிறகு நடந்த பவுல் அவுட் முறையினால் இந்திய அணி வெற்றி பெற்றது.
தென்னாபிரிக்கா, நியூசீலாந்து ஆகிய ஆணிகள் சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்கு தெரிவாகின. நான்கு தெற்காசிய கிரிக்கெட் அணிகளும் அடுத்த சுற்றுக்கு தெரிவாகின.
முதல் சுற்றில் பிரகாசித்த இலங்கையின் ஜெயசூரிய மற்றும் இதர இலங்கை வீரர்கள் இரண்டாம் சுற்றில் பிரகாசிக்க தவறினர். அதனால் இலங்கை அணி அரை இறுதிக்கு தெரிவாகமல் போனது. பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா அணி, பிரட் லீயின் வங்கதேசத்திற்கு எதிரான ஹட்ரிக் மற்றும் ஹெய்டன் சைமண்ட்ஸ் ஆகியோரின் துடுப்பாட்டம் ஆகியவற்றால் அரையிறுதிக்கு முன்னேறியது. யுவராஜ் சிங் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை உருவாக்கினார். (அதுவும் பிளின்டொப் கேலி செய்தமையால்), ஒரு வழியாக தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்தினை வெற்றி கொண்டு இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. பாகிஸ்தான் மற்றும் நியூசீலாந்து அணிகளும் அரையிறுதிக்கு தெரிவாகின. கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்பட்ட ஆஸ்திரேலியாவை இந்தியா போராடி தோற்கடித்தது. பாகிஸ்தான் நியூசீலாந்து அணியை வெற்றி கொள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் நுழைந்தன.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை பெற்றது. ஆரம்பத்தில் விக்கெட்கள் சரிந்தாலும் காம்பிர் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் ஆட்டத்தினால் சவாலான இலக்கை நிர்ணயித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியின் ஆரம்ப விக்கெட்கள் உடனே சரிந்தாலும் இம்ரான் நசிர் அதிரடி ஆடினார். அப்படி இருந்தும் பாகிஸ்தான் விக்கெட்கள் உடனே சரிந்தன. எனவே மீண்டும் ஒரு முறை மிஸ்பா ஹுல் ஹக் நம்பிக்கை தந்தார்.
ஒரு ஓவர் மீதமிருக்க 12 ஓட்டங்கள் பெற வேண்டும். மிஸ்பா ஹுல் ஹக் இரண்டாவது பந்தில் ஆறு ஓட்டங்களை பெற்றார். எனினும் பரபரப்பான நேரத்தில் அடுத்த பந்திலேயே இந்திய அணியிடம் வெற்றி வந்து சேர்ந்தது.
தான் தலைவராக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே கோப்பை வென்று நம்பிக்கை அளித்தார் தோனி. இறுதிப்போட்டியின் நாயகனாக இர்பான் பதான், தொடர் ஆட்ட நாயகனாக பாகிஸ்தானின் சயிட் அப்ரிடி ஆகியோர் தெரிவாகினர். பல பல சாதனைகளுடன் கடந்த தொடர் சிறப்பாக முடிவடைந்தது.
மீண்டும் ஒரு கபில் தேவ் மற்றும் கங்குலி கிடைத்தது போல் தோனியை மக்கள் கருதிவருகின்றனர். இன்று வரை நடைபெற்ற தொடர்களில் ஆசிய கிண்ணபோட்டியில் மட்டுமே இந்திய அணி இவர் தலைமையில் தோல்வியை தழுவியது (அதாவது படுதோல்வி)
ஆக இம்முறை இன்னும் விறுவிறுப்பாக போட்டிகள் இருக்கும் என்றே கருதப்படுகின்றன.
குறிப்பாக இலங்கை இந்தியா அல்லது தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கு தொடரை வெல்லும் சாத்திய கூறுகள் அதிகம். (காரணம் துடிப்பான இளம் வீரர்கள் மற்றும் அனுபவ வீரர்கள் இந்த அணிகளில் அதிகம் உள்ளனர்.) ஆஸ்திரேலியா அணியிணரையும் நம்ப முடியாது (அமைதியாக முண்டியடிப்பதில் அவர்களை மிஞ்ச யார் உள்ளனர்).
பொறுத்திருந்து பார்போம்..
நன்றி
அருண் சர்மா..
Subscribe to:
Post Comments (Atom)
அண்ணா நானும் கிரிக்கெட் பார்த்திருக்கிறேன். கங்குலியின் ஆட்டம் என்னை கவர்ந்தது.
ReplyDeleteya...
ReplyDeleteaanal avar 20-20 vilayaadalaye..
வரும் 20-20 அனைத்து மேட்சுகளும் அப்டேட் செய்வீர்களா??
ReplyDeleteதொடர் முடிந்தவுடன் நடந்தவை அனைத்தையும் சித்தரிப்பேன்..
ReplyDelete