Saturday, April 18, 2009

அஜித் - ஒரு புரிந்துகொள்ள முடியாத நல்ல கதாபாத்திரம்..
உலகில் வெளிப்படையான கருத்துகள், உணர்ச்சிவசப்படுதல் போன்ற குணங்கள் நிறைந்த பிரபலங்களுக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரலிடுவோர் பலர் உள்ளனர். இந்தியாவில் எடுத்துகொண்டால் முன்னால் கிரிக்கெட் வீரர் சௌரவ் கங்குலி மற்றும் தமிழ் நடிகர் அஜித்குமார்..பல எதிர்ப்புகள் மற்றும் பாராட்டுக்களுக்கிடையில் இவர்கள் சாதித்து இருப்பது ஆச்சர்யமான ஒன்றுதான்.

தமிழ் சினிமா வரலாற்றில் பல எதிரிகளையும் அதற்கு நிகராக பல ரசிகர்களையும் வைத்திருக்கும் ஒரு நடிகர் யார் என்றால் சிறு குழந்தை கூட சரியாக பதில் சொல்லும்..
அது வேறு யாரும் அல்ல...அஜித்..

இவருடைய குணங்களுக்கு விரோதமாக இருக்கும் மக்கள் பலர். அதே போல் இவருடைய குணங்களை பார்த்து இவருக்கு ரசிகர்களான மக்களும் மிகவும் பலர்.

முள் பாதையில் தன் வெற்றி கொடியினை "தன்னம்பிக்கை" என்ற ஒரு சொல்லினால் நாட்டிவருபவர். அதிகம் அலட்டிக்கொள்ளாத ஒரு நடிகர் என பல ஊடகங்கள் இவரை புகழ்ந்துள்ளன. வெளிப்படையாக பேசக்கூடியவர் என்றும் பல ஊடகங்கள் இவரை கூறிவந்துள்ளன.

சினிமாவில் அறிமுகமான வேளையில் ஒரு மிகப்பெரிய வாகன விபத்தில் சிக்கினார்.
"இவருடைய காலம் இனிமேல் சரிதான்" என்று கூறி சில நாட்களுக்குள் யாரும் எதிர்பாரா விதமாக சரிவிலிருந்து மீண்டு வந்தார். மீண்டவுடன் "காதல் கோட்டை" "ஆசை" ஆகிய சூப்பர் ஹிட் படங்களும், "உல்லாசம்" "பவித்ரா" என்ற சுமாரான படங்களும் தந்து இளம் நடிகர்களில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

அதன் பிறகு "காதல் மன்னன்" என்ற வெற்றிப்படத்தை தந்தார். அருமையான திரைக்கதையினால் அப்படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு "வாலி" "அமர்க்களம்" "ஆனந்த பூங்காற்றே" "முகவரி" "கண்டுகொண்டேன்" ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் நான் ஒரு நட்சத்திர நடிகர் என்பதை நிரூபித்து காட்டினார்.

"இலகுவில் நட்பு வைத்துக்கொள்ள விரும்பாத ஒரு நடிகர்" என்ற ஒரு பெயர் இவருக்கு சில சினிமா புள்ளிகளால் வழங்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு இவர் நடித்த "தீனா" "சிட்டிசன்" ஆகிய படங்கள் 2001 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை வாங்கித்தந்தது. தொடர்ச்சியாக சில சுமாரான படங்களாக "பூவெல்லாம் உன் வாசம்" "ரெட்" ஆகியன வெளிவந்தன. தொடர்ந்து வந்த "ராஜா" தோல்வியை தழுவியது.

அதன் பிறகு வந்த "வில்லன்" திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.

அதன் பிறகுதான் பல சிக்கல்கள் இவருக்கு உருவாகின. நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், அதனை "ஆஞ்சநேயா" படம் நிரூபிக்கும் என்று கூறினார். இந்த கருத்து பலரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. மற்றும் ஆஞ்சநேயா படமும் தோல்வியடைந்தது. அதன் பிறகு வந்த "ஜனா" அவர் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியை தந்தது. மற்றும் சக நடிகர்களுடன் அவரை ஒப்பிட்டு வேறுபடுத்தி பார்த்ததால், குறிப்பாக விஜய்யுடன் அவரை போட்டியாக வைத்து பார்த்ததால் அவருக்கு பல எதிர் ரசிகர்கள் உருவாகினர் (அன்றைய சிவாஜி- எம் ஜி ஆர், கமல் - ரஜினி கூட்டணிகளுக்குள் இவ்வாறான ஒரு பிரச்சினைகள் உருவானதில்லை)

மற்றும் எளிதில் அவர் உணர்ச்சி வசப்பட்டு பேசிய வார்த்தைகள் பல சர்ச்சைகளை தோற்றுவித்தன. விழாக்களுக்கு சமூகமளிக்காமை, எதையும் கண்டுகொள்ளாமை என்று பலரால் விமர்சிக்கப்பட்டார். மற்றும் சத்தமில்லாமல் உதவி செய்தல் தனது ரசிகர் மன்றத்தை "நற்பணி மன்றமாக" மாற்றியமை ஆகியவற்றால் பலரிடமிருந்து புகழ் வந்து சேர்ந்தன.

தொடர்ந்து வந்த "அட்டகாசம்" திரைப்படம் வெற்றிபெற்றது, ஆனாலும் அடுத்து வந்த "ஜி" தோல்வியடைந்தது. தொடர்ந்து நடித்த "பரமசிவன்" ஓரளவு பெயரை வாங்கித்தந்தது. மற்றும் "திருப்பதி" சுமாராகவே ஓடியது. பின்னர் வந்த "வரலாறு" அவரை மீண்டும் உயர்நிலைக்கு அடைய உதவியது, அதன் பிறகு வந்த "கிரீடம்" ஹிட் ஆனது. ஆனால் "பில்லா" என்ற ரீமேக் படம் அவரை மீண்டும் சிகரத்தை அடைய உதவியது. ரஜினி படங்களுக்கு போட்டியாக வசூலை அள்ளித்தந்தது.மற்றும் சக நடிகர்களுடன் நட்புடன் பழகியமை, விழாக்களுக்கு சமூகமளித்தமை ஆகியவை இவருக்கு நல்ல பெயரை அள்ளித்தந்தன. இறுதியாக வந்த ஏகன் பெரிதாக ஓடவில்லை. அதாவது "சுமார்" ரகமே. மற்றும் "ஈழ தமிழர்களுக்காக நான் ஏன் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்" என்று இவர் கூறியதாக சர்ச்சைகள் எழுந்தன. அதனை அவர் மறுத்தார்.

தற்போது அவருடைய பிறந்தநாள் விழாக்களை கொண்டாட வேண்டாம் என்றும் "இலங்கை தமிழர்கள்" கஷ்டப்படும் வேளையில் நான் பிறந்தநாள் கொண்டாடுவது உகந்ததல்ல என்று கூறி பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அன்பான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது உள்ள இளம் நடிகர்கள் பலர் இவரை ஒரு ரோல் மொடேலாக வைத்திருக்கின்றனர். குறிப்பாக ஆர்யா, சிம்பு, நகுல், ரவி போன்றோர் ஆவர். இவற்றில் சிம்புவும் ஆர்யாவும் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவருடைய முன்னேற்ற பாதைகள் விரும்பாமல் இவரை திட்டி தீர்ப்போர் பலர் உள்ளனர். அப்படியிருந்தும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்துடன் நிலையான இடத்தில் இருப்பது ஒரு ஆச்சரியமான விடயமே.

இப்படி ஒரு கடின வாழ்க்கையை தாண்டி முன்னேறிய இவரை திட்டுவதற்கு மற்றவர்களுக்கும் தகுதி இருக்க வேண்டும்.

எனது இறுதி கருத்து "சினிமா என்பது திட்டி தீர்ப்பதற்கு உருவானதல்ல.."

10 comments:

 1. சரீயாக சொன்னிகர் தல.

  ReplyDelete
 2. அசல் அசல் அசல் அசல் அசல் ......
  சொன்னது எல்லாம் அசலான உண்மைகள்

  ReplyDelete
 3. http://tamil10.com/submit/upcoming.php?category=ரசிகன்-ப

  ReplyDelete
 4. நன்றிகள் :-)..

  ReplyDelete
 5. அசல் தல அஜித் ....
  --> தன்னம்பிக்கை
  --> தன்னடக்கம்
  --> தனிவழி

  ReplyDelete
 6. "சினிமா என்பது திட்டி தீர்ப்பதற்கு உருவானதல்ல.."

  அஜித்தை திட்டுகிறார்கள் என்கிறீர்களே விஜய்யை எவ்வாரெல்லாம் கேலி செய்கிறார்கள் ... அது மட்டும் என்ன நியாயமா ....???

  ReplyDelete
 7. அன்பின் நண்பர்களுக்கு..
  நான் அஜித்தை பற்றி எழுதிய பல கருத்துக்கள் உண்மைதான்.

  மற்றும் விஜயை பற்றி அவதூறுகள் கூறுவது உண்மைதான்.
  மற்றும் விஜய்யை விட அதிக இடர்களை சந்தித்த சில நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.
  சினிமா பின்னணி இல்லாமல் முன்னேறிய நடிகர்களில் இவரும் ஒருவர்.

  விஜய்யும் அஜித்துமே நட்பாக இருக்கிறார்கள். ஆகவே நாங்கள் ஏன் சண்டை பிடிக்க வேண்டும்

  ReplyDelete
 8. தல.. நல்ல பதிவு.. ஆனா.. படங்களின் வரிசை மாறி இருக்குதே...

  மிச்சபடி...
  நச்..
  நச்..
  நச்..

  ReplyDelete
 9. ஆம்.. உல்லாசம் மற்றும் பவித்ரா ஆகிய படங்கள் இடம்பெறும் வரிசை கொஞ்சம் மாறி இருக்கிறது என்று நினைக்கிறன்.

  நன்றி..

  ReplyDelete