Sunday, April 19, 2009
இவர்கள் இருவரும் விலகிவிட்டால் கிரிக்கெட் உலகில் அதைவிட சோகம் வேறெதுவும் இருக்காது ..
"கிரிக்கெட்" ஒரு சிறந்த விளையாட்டு. ஆரம்பத்தில் ஒரு சில நாடுகளில் மட்டும் விளையாடப்பட்ட இது பிற்காலத்தில் உலகில் பல நாடுகளில் பரவியது.
ஒரு சில கிரிக்கெட் வீரர்கள் மக்கள் மனதில் நிறைந்து இருப்பார்கள். அவர்கள் ஓய்வு பெற்றால் அவர்களுக்காக கண்ணீர் வடிப்பார்கள். அன்றைய "பிரட்மன்" இல் இருந்து இன்றைய "கங்குலி" வரை அது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
என்னதான் ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலுவாக இருந்தாலும், நம்ம ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கு எப்பவுமே கிராக்கி அதிகம்தான்.
மியாண்டட், இம்ரான் கான், கபில் தேவ், கவாஸ்கர், ரணதுங்க, அரவிந்த, கங்குலி, ரவி சாஸ்த்ரி, கும்ப்ளே, வாசிம் அக்ரம் என பல வீரர்கள் ஆசிய சரித்திர நாயகர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களின் ஓய்வால் நிச்சயம் இவர்களது ரசிகர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது திண்ணம்.
எங்கள் ஹீரோக்களை பார்த்து (ஆசியர்) மற்றைய கண்ட வீரர்கள் பொறாமைப்பட்டதும் உண்டு.
தற்போது விளையாடும் வீரர்களில் நீண்ட காலமாக விளையாடி வரும் வீரர்கள் என்றால் அது இலங்கையின் ஜெயசூரிய மற்றும் இந்தியாவின் டெண்டுல்கர் என கூறலாம். (இவர்களுக்குப்பின்தான் முரளி, டிராவிட் ஆகியோர் வந்தனர் எனலாம்)
கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் சம அளவிலான சாதனைகளை வைத்துள்ளனர் எனலாம். மற்றும் விளையாட்டுக்கு அப்பால் இவர்கள் இருவரும் உயிர் நண்பர்களாக இருந்து வருகின்றனர் எனலாம். (ஐ பி எல் மும்பை இந்திய அணியில் ஜயசூரியவை சச்சின்தான் இணைத்தார் என்று பல தகவல்கள் வெளியாகின. சந்தோசம்தான். இரண்டு சிங்கங்கள் ஒரே அணியில் விளையாடுவது பெருமையே..)
ஒரு காலத்தில் பலவீனமான அணிகளில் ஒன்றாக இலங்கை அணி கருதப்பட்டது. ஆனால் 1996 உலக கிண்ணத்தை கைப்பற்றி பலரின் வாயை அடைக்கச் செய்தது. அதை வென்றமைக்கு மிக முக்கியமானவர்களுள் ஜெயசூரியவும் ஒருவர். மற்றும் அத்தொடரின் சிறந்த நாயகன் விருதையும் வென்றார்.அதிரடி ஆட்டம் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ஜெயசூரியவே.
மற்றும் பல போட்டிகளில் சிறப்பான முறையில் பந்துவீசும் செய்து இருக்கிறார்.
இவருடைய சிக்ஸர்கள் பலரால் பேசப்பட்டவை. அந்நாட்களில் (1996-2000 போன்ற காலப்பகுதிகளில்) டெண்டுல்கர் 4 ஓட்டங்களுக்கும் ஜெயசூரிய 6 ஓட்டங்களுக்கும் பிரபலமாகவிருந்தனர். ஏன் இப்போதும் கூட இவர்கள்தான் ஞாபகத்தில் இருப்பர்.
இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்பவர் டெண்டுல்கர். இவர் அளவிற்கு இந்தியாவில் வேறெந்த கிரிக்கெட் வீரருக்கும் ரசிகர் இருக்கவில்லை. (தற்போது தோனி அதை மிஞ்சுவார் என்று தெரிகிறது.)
1997 - 1998 காலப்பகுதிகளில் ஆஸ்திரேலியாவுடன் வெற்றி பெறுவது கஷ்டமான விடயம் என்ற ரசிகர்களின் எண்ணங்களை மாற்றி அமைத்தவர் என சச்சினை கூறலாம். குறிப்பாக 1998 ஷார்ஜா கிண்ணத்தை தனது செஞ்சுரிகள் மூலம் பெற்றுக்கொடுத்தார். மற்றும் இவருடைய கவர்ச்சியான "ஷாட்"கள் பல ரசிகர்களை கவர்ந்தன. அணி நிலைமைக்கேற்ப இவருடைய ஆட்டம் இருக்கும்.
தற்போது "மும்பை இந்தியன்ஸ்" அணியில் இவர்கள் இருவரும் ஒன்றாக விளையாடி வருகின்றனர். மற்றும் ஐ பி எல் தொடரின் "சிறந்த ஆரம்ப ஜோடி" என்றால் நிச்சயம் இவர்கள் இருவரும்தான் (சேவாக் மற்றும் காம்பிர் இருவரும் புது ஜோடிதானே..ஆக இப்போதைக்கு இது வேண்டாம்)
இவர்கள் இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார்கள். இவர்களுடைய ஓய்வு நிச்சயம் கிரிக்கெட் உலகில் பாதிப்பை ஏற்படுத்தும். பாதிப்பு கிரிக்கெட் உலகில் மட்டும் அல்ல ரசிகர்களின் மனதிலும்தான்.
நன்றி...
Subscribe to:
Post Comments (Atom)
I love sachin very much. Nice post it is. Keep it up!!
ReplyDeletevery much true
ReplyDeletegood analysis
Umm, Fantastic...
ReplyDeletevery nice articles...
//இன்னும் சில வருடங்களில் ஓய்வு பெற்று விடுவார்கள். இவர்களுடைய ஓய்வு நிச்சயம் கிரிக்கெட் உலகில் பாதிப்பை ஏற்படுத்தும்.//
ReplyDeleteஆமாம் பிராட் மேனின் ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி அதிர்ந்துதான் போனது
///இவர் அளவிற்கு இந்தியாவில் வேறெந்த கிரிக்கெட் வீரருக்கும் ரசிகர் இருக்கவில்லை. (தற்போது தோனி அதை மிஞ்சுவார் என்று தெரிகிறது.) //// இந்திய அணி வெற்றி பெரும் வரை தான் தோனிக்கு ரசிகர்கள் இருப்பார்கள் .... ஆனால் சச்சினுக்கு அப்படி இல்லை .... அவரது ரசிகர் பலம் என்றும் குறையாது ..... அவரை யாராலும் மிஞ்ச முடியாது .... ( கொல்கத்தாவை தவிர மற்ற இடங்களில் சச்சினுக்கு தான் முதல் இடம் .. என்றும்!!!!!)
ReplyDeleteமுன்பு இருந்த தோனிக்கும் இப்போதுள்ள தோனிக்கும் பல மாற்றங்கள் தென்படுகின்றன.
ReplyDeleteஆரம்பத்தில் அவசர அவசரமாகவே விளையாடுவார். ஆனால் தற்போது அவரது ஆட்டத்தில் ஒரு நிதானம் தென்படுகிறது. மற்றும் பொறுமை அவரிடம் அதிகமாக இருக்கிறது. இதுவே அவருக்கு பல ரசிகர்களை குவித்து இருக்கிறது எனலாம்.
Sachin is god, dhoni sorry.. he can't come near the god...
ReplyDeleteஉங்க பதிவு மிக அருமை ...
ReplyDeleteAfter Reading this post i have become ur follower,
If you like my posts you can follow me ;) hope u like it
நல்ல பதிவு. தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeleteநெல்லைத்தமிழின் இவ்வார நட்சத்திரம் ஜொலிக்கிறார். சிறப்பான இடுகைகளுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteanaivarukkum nandri...
ReplyDelete