Thursday, September 9, 2010

தமிழ் தளங்களில் தொடரும் இனவெறி மதவெறி Comments..

நிறைய நாளுக்கு பிறகு ஒரு பதிவு எழுதுகிறேன்.

அண்மைக்காலமாக நான் சில தமிழ் இணையதளங்களை வாசித்துக்கொண்டு வருகிறேன். அவற்றில் ஒரு சில வாசகர்கள் எழுதும் comments என் மனதை மிகவும் புண்படுத்தும் வண்ணம் உள்ளன. இணையதளங்களின் பெயரை சொல்ல கொஞ்சம் யோசனையாக இருக்கிறது, இருந்தாலும் சொல்கிறேன். thatstamil என்ற ஒரு தமிழ் இணையதளம் நான் அதிகமாக பார்க்கும் ஒரு தளம், அவற்றில் செய்திகளுக்கு கீழ் வாசகர்களின் comments இருக்கும். அவற்றை பார்க்கும்போது எங்களுக்கே ஒருவித கவலையை உண்டாக்கும்.. அந்தளவுக்கு இனவெறி மற்றும் மதவெறி வார்த்தைகள் நிறைந்திருக்கும்.

சில உதாரணங்கள்,
1 ஒபாமாவை நிறைய பேர் கறுப்பு நாய் (மன்னிக்கவும்) என்றும், அவர் பின்பற்றும் மதத்தையும் ஏசியமை..
2 வடஇந்தியர்கள் மற்றும் அவர்கள் பேசும் மொழி பின்பற்றும் இனங்கள் ஆகியவற்றை ஏசியமை..
3 ஏன்? ரஜினியை கூட விட்டு வைக்கவில்லை..
4 பலதரப்பட்ட இரட்டை வார்த்தைகள், தகாத வார்த்தைகள், ஒருவர் பதிலளித்தால் மற்றவர் அவருடைய அம்மாவை கூட தகாத வார்த்தைகளால் இழுப்பார்..

இன்டர்நெட் பாவிப்பவர்களை எல்லாம் பொதுவாக உலகம் அறிந்தவர்கள் என்று பலர் கூறுவார். ஆனால் அவர்களா இப்படி எல்லாம் பேசுகின்றனர் என்று நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது.

தமிழன் நன்றியுள்ளவன், வந்தாரை வாழவைப்பவன் , எதிரியின் திறமைகளை கூட பாராட்டுபவன் என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்கிறார்களே.
அவங்களா இப்படி பேசுறாங்க. அதுவும் இனவாதம்? சரி. இலங்கையில்தான் யுத்தம் நடந்துச்சு, இலங்கை அரசை ஏசுறாங்க.. அதுல ஒரு அர்த்தம் இருக்கு.. (அதுக்காக இலங்கை வாழ் சிங்கள மக்களை ஏசவேண்டம், இனம் வேறு அரசியல் வேறு..) அதை விட்டுட்டு சம்பந்தமேயில்லாம தேவையில்லாத செய்திகளில் தகாத வார்த்தைகளை பதிகின்றனர். ஏச விருப்பம் என்றால் அதை நீதியாக விமர்சிக்கலாம், அதற்காக இப்படியெல்லாம் ஏசுவது மிகப்பெரிய தவறு. (அது சரி, நான் சொல்லி இவங்க கேட்கவா போறாங்க)

இந்த செய்தியை படிச்சிட்டு என்னோட குடும்பத்தை கூட பலர் தகாத வார்த்தைகளால் திட்டலாம். பரவாயில்ல.. உண்மைக்கும் நேர்மைக்கும் காலம் இல்லை.

இனவாதம் மதவெறி இல்லாத உலகம்? என்னைபொறுத்த வரை ஒரு பகல் கனவுதான்.. :( :( :(..

Monday, April 26, 2010

ரொம்ப பெருமையா இருக்கு...நேற்று நடந்த போட்டியில் சென்னை வெற்றிபெற்றது அனைத்து தமிழர்களும் sorry கிரிக்கெட் ரசிகர்களும் அறிந்த விடயம். நேற்றைய வெற்றி இலக்கு மும்பை அணிக்கு மிகவும் இலகுவான ஒன்றுதான். இருந்தாலும் தேவையில்லாமல் துடுப்பாட்ட வரிசையை மாற்றியமைத்தது மும்பை அணியின் தோல்விக்கு முதல் காரணம். போலர்ட் கொஞ்சம் முதல்ல வந்திருந்தா சென்னைக்கு சங்குதான்..

சரி அத விடுங்க.

நான் ஒரு விஷயத்த நினைச்சு ரொம்ப பீல் பண்ணுறேன்.

தொட்டதுக்கு எல்லாம் சச்சின் 200 , சச்சின் கடவுள் அது இதுன்னு பதிவு போடுறிங்க. facebookல status போடுறிங்க, அப்போ ஏன் ஐயா நேற்றைய மேட்ச்ல மட்டும் அவருக்கு சப்போர்ட் பண்ணாம நேற்று வந்த தோனிக்கு சப்போர்ட் பண்றீங்க. உடனே "நான் தமிழன் அதுதான் சென்னைக்கு சப்போர்ட் பண்ணுறேன்னு" சொல்லுவிங்களே. வேணாம்பா வேணாம், இந்த விளையாட்டுல சரி கொஞ்சம் "இனம் பற்றிய வார்த்தைய" பாவிக்காம இருங்க, உண்மையின் படி நீங்க கிரிக்கெட் ரசிகர் என்றால் நீங்க சப்போர்ட் பண்ண வேண்டிய அணி சென்னைக்கு இல்ல, மும்பைக்குதான். நேத்து வந்த வீரர்கள்தான் சென்னையில விளையாடுறாங்க (முரளி தவிர..), ஆனால் மும்பையில் ஒரு முதிய சிங்கம், பல இடங்களில் இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய அந்த புயல் விளையாடுதுன்னு ஒருத்தனாச்சும் நினைச்சிங்களா. ஆனாலும் என்ன செய்ய அவங்க தோத்துட்டாங்க. சரி விடுங்க.

ஆனால் இனிமேல் நீங்க அந்த சிங்கத்த பாராட்டி ஒரு பதிவும் போடதிங்க..

உங்கள எல்லாம் நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு.. :-(..

வாழ்க தமிழர்..

தப்பா சொன்னா மன்னிச்சிடுங்க..

Saturday, February 27, 2010

சச்சினும் இனவாதமும் பொறாமையும்..1989 - மிகவும் ஆரம்ப கட்டம்..
வக்கார் யூனுஸ் என்ற அந்த வேகத்தின் பந்து எதிரே துடுப்பெடுத்து ஆடிய அந்த பள்ளிசிறுவனின்
நெற்றியை பதம்பார்த்தது.
இதனை மனதில் வைத்திருந்தானோ என்னவோ, அந்த சிறுவன் அதற்கு தகுந்த பதிலடியை 2003 உலககிண்ணத்தில் கொடுத்தான்.
1998 - ஜிம்பாப்வே அணி முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஹென்றி ஒலோங்கா என்ற ஒரு வேகபந்து வீச்சாளர் அந்த முக்கியமான விக்கெட்டை தொடர்ச்சியாக 2 தடவைகள் ( 2 போட்டிகளில்) எடுத்து மைதானம் முழுவதும் சந்தோஷத்தில் (சிறிய அகங்காரத்துடன்) துள்ளிதிரிந்தார்.
ஆனால் அடுத்த ஒரு இறுதிப்போட்டியில் தனக்கு அப்படி ஒரு பதில் அந்த துடுப்பின் மூலம் வந்திருக்கும் என்று ஒலோங்கா வாழ்க்கையில் நினைத்தும் பார்த்திருக்கமாட்டார். (அடி ஒன்னும் அம்மி மாதிரி..)
1999 - அதிகம் ஓட்டங்களை வாரி வழங்காத ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மெக்கிராத்தின் பந்துவீச்சுக்கு தொடர்ந்து தடுமாறி வந்தவர். பின்னர் 2000 மினி உலககோப்பை மற்றும் 2001 ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் அந்த மெக்கிராத்தின் பந்துவீச்சுகளை எல்லைக்கோட்டுக்கே அனுப்பியவண்ணம் இருந்தார்.
2003 - தொடர்ச்சியாக தன்னை ஏளனம் செய்த (மீடியாக்களுக்கு) அக்தர் மற்றும் கட்டிக் என்ற அந்த பந்துவீச்சாளர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்த அந்த வீரரை யார் மறப்பார்கள்.
2008 - ஆசிய கிண்ண தொடரில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் மென்டிஸ் என்ற அந்த சுழலுக்கு சூறாவளி போல் இந்திய அணி சரிந்தது. ஆனால் கடந்த வருடம் அதே மென்டிஸ் என்ற சுழலுக்கு ஐ பி எல் மற்றும் கோம்பாக் (compaq cup) கிண்ண கோப்பையில் தகுந்த பதிலடி கொடுத்து, அந்த சுழலை அணியிலிருந்து தூக்கும் அளவுக்கு முக்கிய காரணியாக இருந்தவர்.

இன்னும் சொல்ல போனால், அன்றைய அக்ரம், யூனுஸ் முதல் இன்றைய ஜோன்சன் மென்டிஸ் வரை எல்லா பந்துவீச்சாளரையும் துல்லியமாக எதிர்கொள்ளும் அந்த ஒரு மனிதன் வேறு யாரும் அல்ல. "சச்சின்"தான்..

அந்த 200 ஓட்டங்கள். எப்படி பாராட்டுவது, அதுவும் பலம் வாய்ந்த தென்னபிரிக்கவுக்கு எதிராக.

அந்த போட்டியில் ரசிகர்கள் ஒரு விடயத்தை உற்று பார்த்திருப்பார்கள். அது தெ.ஆ'வின் வேக(கோப)பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெண்டுல்கரிடம் ஏதோ சண்டைக்கே போய்க்கொண்டிருந்தார்.ஆனால் இதை பார்த்து சச்சின் சிரித்த வண்ணமே இருந்தார். (இது இன்றைய யுவராஜ் sorry இளம் வீரர்களுக்கு ஒரு உதாரணம்)இதை பார்த்த டெண்டுல்கரும் மற்றைய பக்கம் இருந்த யூசுப் பதானும் அவருடைய அடுத்த ஓவரையே கலக்கி எடுத்துவிட்டனர் (4 பவுண்டரிகள்). இப்படி வேற எந்த வீரன் ஐயா துடுப்பால் பதிலடி கொடுப்பான். (சனத், கங்குலி, சேவாக் தவிர)..

லாரா, இன்சமாம்.. ம்ம் நான் நினைக்கவில்லை.

20 வருடம் விளையாடியிருக்கிறார், எப்போதாவது கிளப், பார் (bar), பெண்கள் அது இதுனு ஒரு கிசு கிசுவிலாவது சிக்கியிருக்கிறாரா?
முன்பு ஒரு பதிவில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஜெயசூரிய ஆரம்பத்திலிருந்து துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்திருந்தால் சச்சினின் சாதனைகளை நெருங்கியிருப்பார் என்று அதில் போடப்பட்டிருந்தது. நானும் ஒன்றை கூற விரும்புகிறேன், சச்சின் பந்து வீசாத போட்டிகள் மிக மிக அதிகம். அந்த போட்டிகளில் அவர் பந்து வீசியிருந்தால் 200 ஒருநாள் விக்கெட்களை எடுத்திருப்பார் என்பது நிச்சயம்.

இப்படிப்பட்ட இவருக்கு பல எதிரிகள் அண்டை நாடுகளில் இருப்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை ரசிகர்கள், அதிலும் இலங்கை ரசிகர்கள் இவரை ஏசுவதிலேயே + குறைசொல்வதிலேயே குறியாக இருப்பார்கள், "சாதனைக்காக விளையாடுபவர், அதிரடி ஆடமாட்டார்" என்று பல, இதிலேயே புரிகிறது அவர்கள் எவ்வளவு பொறாமையில் இருக்கிறார்கள் என்று. (நான் இந்திய ரசிகனும் அல்ல, இலங்கை பாகிஸ்தான் ரசிகனும் அல்ல, நான் ஒரு கிரிக்கெட் ரசிகன்..), மற்றும் பல இனவாத கூச்சல்கள் வேறு,
சிறு வயதில் எனக்கு மிகவும் ஞாபகம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறும் போட்டி ஒன்றில் சச்சின் விளாசிக்கொண்டிருந்தார். அப்போது அயல் வீட்டில் உள்ள ஒரு சகோதர இனத்தவர் சிங்கள மொழியில் "மே இந்திய கரியா" (india kariyaa) (தவறான வார்த்தையை பதிவில் இட்டதற்கு மன்னிக்கவும்..) என்று ஏசதொடங்கினார். உடனே வீட்டில் இருந்த என் அப்பா அந்த வி.ஐ.பி உடன் சண்டைக்கு போனார். அப்பா கேட்ட கேள்வி "அப்படி ஏசும் அளவுக்கு அவன் உங்களுக்கு என்ன செய்தான்" என்று.

இது போன்று இன்னும் எத்தனை இனவாத வசனங்கள் விளையாட்டுகளில் வரப்போகின்றனவோ தெரியவில்லை. :-(..

ப்ளீஸ், பிடிச்சிருக்கும் என்று நினைக்கிறேன், வாக்களியுங்கள்..

Sunday, February 7, 2010

தமிழ் சினிமா நாயகர்களும் WWE நட்சத்திரங்களும் ஒப்பிட்டால்..இதோ..

ப்ளாக் எழுதும் எத்தனை பேர் மல்யுத்தம் (WWE) பார்ப்பீர்கள் என்று தெரியவில்லை..
ஆனால் பார்ப்பவர்களுக்கு ஒரு ஆர்வமான பார்வை..
(குறிப்பு - இது என்னுடைய கற்பனையில் வந்தது, உங்களுடைய கற்பனையில் எப்படி என்று தெரியவில்லை..)

ரஜினிகாந்த் - Undertaker
இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் தோன்றினாலே போதும், அரங்கம் அதிரும்.. இருவரும் பழமையானவர்கள், புதிய ஸ்டைல்களை அறிமுகப்படுத்துபவர்கள்.. கோபம் வந்தால் பொங்கி எழுவார்கள்... அதிகமாக வில்லன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்பவர்கள்... என்னதான் பழையவர்கள் என்றாலும் இவர்களுக்கு இன்னும் மவுசு குறையவில்லை.. அவ்வளவு ரசிகர் பட்டாளம் உள்ளது..இருவரும் கிட்டத்தட்ட சம்பந்தப்பட்ட துறைகளின் முன்னோடிகள் எனலாம்..


கமல்ஹாசன் - shawn micheals
இருவரும் உற்சாகம் நிறைந்தவர்கள், ஆனால் சண்டை காட்சிகளில் (மல்யுத்தமும் சரி) கொஞ்சம் கூட நடிப்பார்கள் sorry அடிவேண்டுவார்கள், பிறகு பழிவாங்குவார்கள். வயதானாலும் இவர்களின் முகத்தில் இன்றும் ஒரு இளமை தெரிகிறது..

அஜித் - Triple H
ஆக்ரோஷம் நிறைந்தவர்கள் இவர்கள் இருவரும். இருவரிடமும் ஒரு டைமிங் இருக்கும். சிலவேளைகளில் பத்திரிகையாளர் sorry பார்வையாளருக்கு வில்லனாக தெரிபவர்கள். சம்பந்தப்பட்ட துறைகளில் ஸ்டைலிஷ் ஆக தெரிபவர்கள்.சம்பந்தப்பட்ட துறைகளில் தற்போது முன்னணியில் உள்ளவர்களில் இவர்களும் இருக்கின்றனர்.

மிகுதி வெகு விரைவில்...