Saturday, February 27, 2010

சச்சினும் இனவாதமும் பொறாமையும்..1989 - மிகவும் ஆரம்ப கட்டம்..
வக்கார் யூனுஸ் என்ற அந்த வேகத்தின் பந்து எதிரே துடுப்பெடுத்து ஆடிய அந்த பள்ளிசிறுவனின்
நெற்றியை பதம்பார்த்தது.
இதனை மனதில் வைத்திருந்தானோ என்னவோ, அந்த சிறுவன் அதற்கு தகுந்த பதிலடியை 2003 உலககிண்ணத்தில் கொடுத்தான்.
1998 - ஜிம்பாப்வே அணி முன்னேறிக்கொண்டிருந்த காலகட்டம் அது. ஹென்றி ஒலோங்கா என்ற ஒரு வேகபந்து வீச்சாளர் அந்த முக்கியமான விக்கெட்டை தொடர்ச்சியாக 2 தடவைகள் ( 2 போட்டிகளில்) எடுத்து மைதானம் முழுவதும் சந்தோஷத்தில் (சிறிய அகங்காரத்துடன்) துள்ளிதிரிந்தார்.
ஆனால் அடுத்த ஒரு இறுதிப்போட்டியில் தனக்கு அப்படி ஒரு பதில் அந்த துடுப்பின் மூலம் வந்திருக்கும் என்று ஒலோங்கா வாழ்க்கையில் நினைத்தும் பார்த்திருக்கமாட்டார். (அடி ஒன்னும் அம்மி மாதிரி..)
1999 - அதிகம் ஓட்டங்களை வாரி வழங்காத ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மெக்கிராத்தின் பந்துவீச்சுக்கு தொடர்ந்து தடுமாறி வந்தவர். பின்னர் 2000 மினி உலககோப்பை மற்றும் 2001 ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் அந்த மெக்கிராத்தின் பந்துவீச்சுகளை எல்லைக்கோட்டுக்கே அனுப்பியவண்ணம் இருந்தார்.
2003 - தொடர்ச்சியாக தன்னை ஏளனம் செய்த (மீடியாக்களுக்கு) அக்தர் மற்றும் கட்டிக் என்ற அந்த பந்துவீச்சாளர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்த அந்த வீரரை யார் மறப்பார்கள்.
2008 - ஆசிய கிண்ண தொடரில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் மென்டிஸ் என்ற அந்த சுழலுக்கு சூறாவளி போல் இந்திய அணி சரிந்தது. ஆனால் கடந்த வருடம் அதே மென்டிஸ் என்ற சுழலுக்கு ஐ பி எல் மற்றும் கோம்பாக் (compaq cup) கிண்ண கோப்பையில் தகுந்த பதிலடி கொடுத்து, அந்த சுழலை அணியிலிருந்து தூக்கும் அளவுக்கு முக்கிய காரணியாக இருந்தவர்.

இன்னும் சொல்ல போனால், அன்றைய அக்ரம், யூனுஸ் முதல் இன்றைய ஜோன்சன் மென்டிஸ் வரை எல்லா பந்துவீச்சாளரையும் துல்லியமாக எதிர்கொள்ளும் அந்த ஒரு மனிதன் வேறு யாரும் அல்ல. "சச்சின்"தான்..

அந்த 200 ஓட்டங்கள். எப்படி பாராட்டுவது, அதுவும் பலம் வாய்ந்த தென்னபிரிக்கவுக்கு எதிராக.

அந்த போட்டியில் ரசிகர்கள் ஒரு விடயத்தை உற்று பார்த்திருப்பார்கள். அது தெ.ஆ'வின் வேக(கோப)பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெண்டுல்கரிடம் ஏதோ சண்டைக்கே போய்க்கொண்டிருந்தார்.ஆனால் இதை பார்த்து சச்சின் சிரித்த வண்ணமே இருந்தார். (இது இன்றைய யுவராஜ் sorry இளம் வீரர்களுக்கு ஒரு உதாரணம்)இதை பார்த்த டெண்டுல்கரும் மற்றைய பக்கம் இருந்த யூசுப் பதானும் அவருடைய அடுத்த ஓவரையே கலக்கி எடுத்துவிட்டனர் (4 பவுண்டரிகள்). இப்படி வேற எந்த வீரன் ஐயா துடுப்பால் பதிலடி கொடுப்பான். (சனத், கங்குலி, சேவாக் தவிர)..

லாரா, இன்சமாம்.. ம்ம் நான் நினைக்கவில்லை.

20 வருடம் விளையாடியிருக்கிறார், எப்போதாவது கிளப், பார் (bar), பெண்கள் அது இதுனு ஒரு கிசு கிசுவிலாவது சிக்கியிருக்கிறாரா?
முன்பு ஒரு பதிவில் ஒருவர் குறிப்பிட்டிருந்தார். ஜெயசூரிய ஆரம்பத்திலிருந்து துடுப்பாட்ட வீரராக விளையாடி வந்திருந்தால் சச்சினின் சாதனைகளை நெருங்கியிருப்பார் என்று அதில் போடப்பட்டிருந்தது. நானும் ஒன்றை கூற விரும்புகிறேன், சச்சின் பந்து வீசாத போட்டிகள் மிக மிக அதிகம். அந்த போட்டிகளில் அவர் பந்து வீசியிருந்தால் 200 ஒருநாள் விக்கெட்களை எடுத்திருப்பார் என்பது நிச்சயம்.

இப்படிப்பட்ட இவருக்கு பல எதிரிகள் அண்டை நாடுகளில் இருப்பதை நினைக்கும்போது கவலையாக இருக்கிறது, குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை ரசிகர்கள், அதிலும் இலங்கை ரசிகர்கள் இவரை ஏசுவதிலேயே + குறைசொல்வதிலேயே குறியாக இருப்பார்கள், "சாதனைக்காக விளையாடுபவர், அதிரடி ஆடமாட்டார்" என்று பல, இதிலேயே புரிகிறது அவர்கள் எவ்வளவு பொறாமையில் இருக்கிறார்கள் என்று. (நான் இந்திய ரசிகனும் அல்ல, இலங்கை பாகிஸ்தான் ரசிகனும் அல்ல, நான் ஒரு கிரிக்கெட் ரசிகன்..), மற்றும் பல இனவாத கூச்சல்கள் வேறு,
சிறு வயதில் எனக்கு மிகவும் ஞாபகம். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறும் போட்டி ஒன்றில் சச்சின் விளாசிக்கொண்டிருந்தார். அப்போது அயல் வீட்டில் உள்ள ஒரு சகோதர இனத்தவர் சிங்கள மொழியில் "மே இந்திய கரியா" (india kariyaa) (தவறான வார்த்தையை பதிவில் இட்டதற்கு மன்னிக்கவும்..) என்று ஏசதொடங்கினார். உடனே வீட்டில் இருந்த என் அப்பா அந்த வி.ஐ.பி உடன் சண்டைக்கு போனார். அப்பா கேட்ட கேள்வி "அப்படி ஏசும் அளவுக்கு அவன் உங்களுக்கு என்ன செய்தான்" என்று.

இது போன்று இன்னும் எத்தனை இனவாத வசனங்கள் விளையாட்டுகளில் வரப்போகின்றனவோ தெரியவில்லை. :-(..

ப்ளீஸ், பிடிச்சிருக்கும் என்று நினைக்கிறேன், வாக்களியுங்கள்..

8 comments:

 1. தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

  East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

  Have a look at here too..

  Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

  ReplyDelete
 2. thank you,
  i already viewed your site,
  thanks for your comments..

  ReplyDelete
 3. neutralaana post arun nalla irukku

  ReplyDelete
 4. nanba aduta natta vidunga, ingaye ethana per irukanga

  ReplyDelete
 5. peyarthaan south asia,
  but racism innum irukku..
  :-(..

  ReplyDelete
 6. sachin is only jenuine person in bci

  ReplyDelete
 7. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

  அன்புடன்
  www.bogy.in

  ReplyDelete