Sunday, October 11, 2009
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் நிலைமை..
தோற்றால் படுதோல்வி, வெற்றிபெற்றால் அமோகவெற்றி.. கிரிக்கெட்டில் அப்படி ஒரு அணி இருக்குமென்றால் அது நிச்சயம் இந்திய அணியாகத்தான் இருக்கும்..
துடுப்பாட்டத்தில் ஜாம்பவான்களை நிரப்பிய ஒரு அணி என்றால் அது இந்திய அணியே..
சேவாக், யுவராஜ் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களையும், சச்சின், டோனி, டிராவிட் என்ற பொறுமையான துடுப்பாட்ட வீரர்களை நிரப்பிய இன்றைய அணிதான் இந்திய அணி..
2007 உலககிண்ணதொடரில் முதல் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, அந்த தொடருக்குப்பிறகு ஆசியா கோப்பை மற்றும் T20 (2009) தொடர் இரண்டில் மட்டுமே படுதோல்வியை கண்டுள்ளது, மற்றைய தொடர்களில் சிறப்பாக மற்றும் ஓரளவு சிறப்பாகவே விளையாடி வருகின்றனர்.
தலைமைத்துவத்தில் டிராவிட், கங்குலி மற்றும் ரணதுங்க ஆகியோரை ஓரளவுக்கு நினைவுபடுத்துபவர் டோனி. இவருடைய தலைமைத்துவத்தின் பின்னர் வெளிநாடுகளில் பல தொடர்களை வென்றது இந்தியா. குறிப்பாக நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளை அந்நாட்டு மண்களில் வைத்து வெற்றி கொண்டது. பொதுவாக ஆஸ்திரேலியாவிடம் சறுக்கிவிடுபவர்கள் இந்திய அணியினர். ஆனால் இவருடைய தலைமையின் பின் அவர்களின் சொந்த நாட்டில் வைத்து ஒரு நாள் தொடரை வென்றது.
ஒரு காலத்தில் சச்சின் அசாருதின் ஆகியோர் ஆட்டமிழந்தால் மற்ற வீரர்கள் வரிசையாக ஆட்டமிழப்பார்கள். இப்போது அப்படி ஒரு பிரச்சினை உருவாகுவது குறைவு. சச்சின் தவிர காம்பிர், சேவாக், யுவராஜ், டிராவிட், ரெய்னா, டோனி என பல வீரர்கள் திறமையாக விளையாடுகிறார்கள். (எனினும் இவர்களில் டிராவிட் மற்றும் டோனி இருவர் மட்டுமே பொறுமைசாலிகள்.. அதுக்காக எல்லா பந்துகளையும் தட்டகூடாது.. :D)
ஆனால் பந்து வீச்சில் அண்மைக்காலமாக தடுமாறுவது தெரிந்த ஒன்றே. ஆசிஷ் நெஹ்ரா மற்றும் ஹர்பஜன் மட்டுமே ஆறுதல் அளிக்கிறார்கள். இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் எந்த உத்திகளும் தெரியவில்லை. சகீர் கான் எப்போது குணமடைவார் என பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
களத்தடுப்பில் யுவராஜ், கார்த்திக், ரெய்னா, கொஹ்லி என நல்ல வீரர்கள் உள்ளனர். ஆனால் பல இடங்களில் யுஸுப் பதான் பிடிகளை தவறவிடுகிறார்.. (பிடி மட்டுமல்ல துடுப்பாடமும்தான்.. அவர் ஆறுதலளிப்பது பந்துவீச்சில் மட்டுமே)..
எதிர்வரும் தொடர்கள் மிகவும் சவாலானவை.. குறிப்பாக ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.. பார்ப்போம் பந்துவீச்சு மட்டும் களத்தடுப்பு எப்படி இருக்கும் என்று..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment